பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் – தமிழக அரசு

ஊரடங்கு  உத்தரவால் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

கொரோனா வைரஸால் இந்தியாவில் 8000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் அனைவரையும் வீட்டுக்குள் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு  ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால்  ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளில் பொதுமக்கள் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.மேலும் ஏப்ரல் 17-ஆம் தேதி தீரன் சின்னமலை பிறந்த நாளிலும் மக்கள் வெளியே வரவேண்டாம் என்றும்  அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர் என்றும்   தமிழக அரசு அறிவித்துள்ளது.