புள்ளி பட்டியலில் நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளிய மழை!

நடப்பு  உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள்  இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்ட 10 அணிகள் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் நான்கு  இடத்தில் இருக்கும் அணி மட்டுமே அரை இறுதி சுற்றுக்கு செல்ல தகுதியை  பெறும்.
18- வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியும் , இந்திய அணியும் நேற்று இந்திய  நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு மோத இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக மழை வெளுத்து வாங்கியது. நேற்று 5 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால் மைதானத்தில் தண்ணீர் புகுந்தது அதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இதன் படி புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 7 புள்ளிகளும் , ஆஸ்திரேலியா 6 புள்ளிகளும் , இந்தியா 5 புள்ளிகளும்  உள்ளனர்.ஆனால் இந்த அணிகளை விட மழை தான் 8 புள்ளி பெற்று முதல் இடத்தில் உள்ளது.இதுவரை 4 போட்டிகள் மழையால் நின்று உள்ளதால் மழை புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து நியூசிலாந்து அணியை  பின்னுக்கு தள்ளியது.
 

author avatar
murugan