27-ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது! டி.ராஜேந்தர் அதிரடி!

டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவின் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோக சங்க தலைவராக உள்ளார்.  இவர் அளித்துள்ள பேட்டியில் டிடிஎஸ் குறித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர்  பேசுகையில், திரைப்படங்களுக்கான டிடிஎஸ், தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இல்லாமல் தமிழகத்தில் மட்டும்தான் விநியோகஸ்தர்கள் இந்த டிடிஎஸ் கட்ட வேண்டும் என்று சட்டம் உள்ளது. இப்படி வரி கட்டினால் இந்த திரைப்பட விநியோகஸ்தர்கள் இனமே அழிந்துவிடும் என்று கூறியுள்ளார்.

மேலும், உங்களுக்கு கொரோனா வைரஸ் எவ்வளவு ஆபத்தானதோ, அந்தளவிற்கு திரையரங்குகளுக்கு டிடிஎஸ் வரி ஆபத்தானது. எனவே அந்த வரியைக் கட்ட இயலாத காரணத்தால், தமிழகத்தில் வரும் 27-ஆம் தேதி முதல் புதிய படங்களை திரையிடாமல் இருக்க தமிழக திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.