இரண்டு வாரத்தில் 50 கோடி வசூல்! குடும்பங்கள் கொண்டாடும் நம்ம வீட்டு பிள்ளை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம் பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாகவும், அனு இம்மானுவேல் ஹீரோயினாகவும் நடித்து இருந்தார். மேலும், பாரதிராஜா, ‘நட்டி’ நடராஜ், சமுத்திரக்கனி, சூரி, என பலர் நடித்துள்ளார்.
குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்ததால், இப்படம் தமிழ் குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆகி இரண்டு வருடங்கள் ஆன பிறகும் பல திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. இதற்கு முன்னர் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் திரைப்படம் தமிழ்நாட்டில் 58 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.