நான் திருமணம் செய்யாமல் இருப்பது தான் எனது நீண்ட ஆயுளுக்கு காரணம்! அமெரிக்க மூதாட்டி பெருமிதம்!

நாம் எல்லாருமே இளமையாக இருப்பதை தான் விரும்புகிறோம். ஆனால், நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், ஒரு வயதிற்கு மேல் நமக்கு வயது முதிர்வு ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த லூயிஸ் சாயினோர் என்ற மூதாட்டி தனது 107-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இந்த பெண்மணி 1912-ம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தார். இவர் இளம் வயதிலிருந்தே நடனத்தின் மீது தீராத பற்று கொண்டிருந்தார். இவர் தனது நீண்ட ஆயுளுக்கான காரணத்தை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆரோக்கியமான உணவுடன், தினமும் நடனம் ஆடுவதே இதற்கு காரணமாக கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், எனது நீண்ட ஆயுளுக்கு காரணமே நான் திருமண செய்து கொள்ளாமல் இருப்பது தான் என மிகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.  ஆனாலும், வயது முதிர்வினால் ஏற்படக்கூடிய கண்பார்வை மங்குதல், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் லூயிஸுக்கு உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.