கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மோடி மீது பாய்ச்சல் !

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா பிரதமர் மோடி, காங்கிரஸ் அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி இருப்பதாக  தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இது குறித்துப் பேசிய சித்தராமையா, பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்தார். முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஊழல் வழக்கில் சிறை சென்று வந்ததை மறந்து, தங்களது அரசின் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது, முதலீட்டுக்கான தகுதியில் 11 ஆவது இடத்தில் இருந்த கர்நாடகா, தற்போது முதல் இடத்தில் இருப்பதாக சித்தராமையா கூறினார். நாட்டின் வர்த்தகத்தில் 38 சதவீதம் கர்நாடாகாவில் நடைபெறுவதை மத்திய அரசின் புள்ளி விவரங்களே சுட்டிக்காட்டுவதாக சித்தராமையா தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment