விராட் கோலியை மெக்ராத் புகழாரம்

  • அவர் விட்டுச்சென்ற சாதனையில்அவர் விட்டு முறியடிக்க முடியாதவையாக இருக்கின்றன.
  • விராட் கோஹ்லி எனக்கு லாரா மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரையும் நினைவு கூறுகிறார்.

2003 மற்றும் 2007 உலகக் கோப்பைகளில் அசாத்தியமான மித வேகப்பந்து வீச்சாளர் ஆக திகழ்ந்தவர் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கிளென் மெக்ராத்.

அவர் விட்டுச்சென்ற சாதனையில்அவர் விட்டு முறியடிக்க முடியாதவையாக இருக்கின்றன. தனது நேர்த்தியான பந்துவீச்சால் சச்சின், கங்குலி, டிராவிட் என இந்திய அணியில் அனைவரையும் திணறடித்தவர்.

தனது மனைவியின் இறப்பிற்குப் பிறகு தொண்டு நிறுவனம் நடத்தி கிரிக்கெட் உலகிற்கு இன்றளவும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் விராத் கோலியின் ஆட்டத்தை கண்டு மிரண்டு போய் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது “விராட் கோஹ்லி எனக்கு லாரா மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரையும் நினைவு கூறுகிறார். லாராவின் தொடர்ச்சியான ஆட்டத்தையும் சச்சினின் சாதனை களையும் ஒருசேர கண்டதுபோல விராட் கோலி இருக்கிறார்” என புகழாரம் சூட்டினார்

author avatar
Vignesh

Leave a Comment