குட்டிக்கதை தெறிவிக்கவிட்ட சாதனை..மகிழ்ச்சியில் படக்குழு

'மாஸ்டர்' படத்தின் 'ஒரு குட்டிக் கதை' பாடல் உலகளவில் அதிகம் பேர் பார்த்த பட்டியலில்

By Fahad | Published: Apr 02 2020 01:20 PM

'மாஸ்டர்' படத்தின் 'ஒரு குட்டிக் கதை' பாடல் உலகளவில் அதிகம் பேர் பார்த்த பட்டியலில் 3 வது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் மாஸ்டர் இந்தபடத்தில் அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள 'ஒரு குட்டிக் கதை' என்ற தலைப்பிலான பாடலை, காதலர் தினத்தன்று மாலை 5 மணிக்கு படக்குழுவால் வெளியிடப்பட்டது.
https://twitter.com/anirudhofficial/status/1228681973364740096
இந்த பாடலானது ரசிகர்களுக்கு அட்வைஸ் பாணியில் பாடலின் வரிகளை அருண்ராஜா காமராஜ் எழுதியிருந்தார். பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பாடல் வெளியாகிய 24 மணி நேரத்தில் உலகளவில் அதிகம் பேர் பார்த்த வீடியோக்கள் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.இந்தச் சாதனையால் படக்குழு மகிழ்ச்சியடைந்து உள்ளது .இதுவரை யூ-டியூப் பக்கத்தில்  10 மில்லியன் பார்வைகளைக் கடந்தது மட்டுமன்றி 1 மில்லியன் லைக்குகளை குவித்து உள்ளது குட்டிக்கதை. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News From 10 million