சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் மாஸ் அப்டேட்!

  • சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் மாஸ் அப்டேட்.
  • இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு. 

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று திரைப்படம். இந்த திரைப்படம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக போஸ்டர்கள், டீசர் மற்றும் தீம் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், சூரரை போற்று படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.