கை தட்டினாலும்,டார்ச் அடிச்சாலும் கொரோனா பிரச்னை தீராது -ராகுல் காந்தி

கை தட்டினாலும்,டார்ச் அடிச்சாலும் கொரோனா பிரச்னை தீராது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார்.அதில் ,இன்று (ஏப்ரல் 5-ம் தேதி )இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தெரிவித்தார்.

வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் .வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என்று வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்தார்.இதற்கு பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவில்,கை தட்டினாலும் , டார்ச்  அடிச்சாலும் கொரோனா பிரச்னை தீராது .கொரோனா வைரஸை கண்டறிய போதுமான அளவு பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை.இந்தியாவில் 10 லட்சம் பேரில் வெறும் 29 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் உலக அளவில் செய்யப்பட்ட பரிசோதனைகள் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.