அமெரிக்காவில் கொரோனா வேகம் அதிகரித்து வரும் நிலையில் ''ஹைட்ரோசைக்லோரோகுவைன்'' மருந்தை இந்தியா அரசிடம் தொலைபேசி வாயிலாக கேட்ட அதிபர் டிரம்ப்….

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் அந்த கிருமியுடன் போராடி அந்த கிருமியை  கொல்லும் மருந்துகளின் பெயரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே டுவிட்டரில்  வெளியிட்டுள்ளார்.
அவை, ஹைட்ரோசைக்லோரோகுவைன் மற்றும் அஸித்ரோமைசின் (HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN) ஆகிய இரு மருந்துகளை ஒன்றாக சேர்த்து உட்கொண்டால் மருத்துவத்துறை வரலாறில் மிகப்பெரிய மாற்றத்துக்கான உண்மையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என நம்புவதாக  தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். இந்நிலையில் இந்தியாவில் இந்த மருந்தை பயன்படுத்தலாம் என்றும், இந்த மருந்த ஏற்றுமதி செய்ய தடை விதித்தும் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில், தற்போது டிரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொரோனா விவகாரம்  குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் வாஷிங்டன்னில் கூறிய அவர், அமெரிக்காவில் அடுத்த இரண்டு வாரங்களில் ஏராளமான உயிரிழப்பு ஏற்படக்கூடும் எனவே  இந்திய அரசு ஹைட்ரோசைக்லோரோகுவைன் மருந்துகளின் ஏற்றுமதி மீதான தடையை நீக்க வேண்டும் என்றும், கொரோனா பரவலை தடுக்க தமது அரசு முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது என்றும், இதற்காக பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Kaliraj