பத்னாவிஸ் அரசு தக்கவைக்கப்படுமா ? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

மகாராஷ்டிரா தொடர்பான வழக்கில் இன்று  தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்.
நீண்ட நாட்களாக குழப்பம் நிலவி வந்த மகாராஷ்டிராவில்  முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் பதவியேற்றார்கள்.இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனிடையே மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக கூட்டணிக்கு ஆளுநர் அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக  ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி  தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா  ஆகிய கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்தது.இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
இதில் உச்சநீதிமன்றம்  இந்த வழக்கின் விசாரணை இன்று  ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது.வழக்கில் இன்று  காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிப்பதாக  உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.