பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோஷத்துடன் 2,668 அடி உயரத்தில் திருவண்ணமலை மகாதீபம் ஏற்றப்பட்டது!

பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோஷத்துடன் 2,668 அடி உயரத்தில் திருவண்ணமலை மகாதீபம் ஏற்றப்பட்டது!

Default Image
  • திருவண்ணாமலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி தீப திருவிழா தொடங்கியது. 
  • இன்று திருவண்ணமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா நவம்பர் மாதம் 28-ந்தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. இன்று முக்கிய நிகழ்வான மகாதீபம் ஏற்றும் விழா நடைபெற்றுவருகிறது. இதனை காண திருவண்ணாமலையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு எல்லாம் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதன் பின்னர் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது . இதை தொடர்ந்து,தீப தரிசன மண்டபத்தில் சிறப்பு அலங்கரத்தில் பஞ்சமூர்த்திகள் ஸ்வாமிகள் அருள்பாலித்தார்.

2,668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை உச்சியில் தங்கக் கொடி மரம் முன்பு உள்ள அகண்டத்தில் தீபம் தற்போது மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையார் ஜோதி வடிவமாக காட்சி கொடுப்பதை பல லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் தரிசனம் செய்து வருகின்றனர். இன்று முதல் 11 நாளைக்கு அண்ணாமலையார் தீப ஒளி வடிவில் காட்சிதருவார்.

Join our channel google news Youtube