நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு.!

மதுரையில் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் இந்த பொது முடக்கமானது அமலுக்கு வந்தது.

தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மதுரையிலும் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு 12 மணிமுதல் இந்த பொது முடக்கமானது அமலுக்கு வந்தது. ஜூன் 30 வரையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொது போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 1கிமீ தொலைவில் உள்ள கடைகளுக்கு மட்டுமே செல்ல அனுமதி.

டீ கடைகளுக்கு அனுமதி இல்லை. உணவகங்களுக்கு பார்சல் மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

மதுரைக்கு இயக்கப்படும் பொதுப்போக்குவரத்தானது குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே இயக்கப்படும்.திருமங்கலம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருப்புவனம், மேலூர், வாடிப்பட்டி, செக்கானூரணி ஆகிய மதுரை மாவட்ட எல்லைகள் வரையே பேருந்துகள் இயக்கப்படும். அதனை தாண்டி மதுரைக்குள் பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.