உள்ளாட்சித் தேர்தல் : இன்று இறுதிக்கட்ட பிரச்சாரம்

  • தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 
  • முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. 

தமிழகத்தில் ஊராக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தலை அறிவித்தது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் .ஆனால் அதில் மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம்  அறிவித்தது.அதன்படி  வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதற்கட்ட தேர்தல் வருகின்ற 27 ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. 2-ஆம் கட்ட தேர்தல் 30 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 28 ஆம் தேதியுடன் பரப்புரை ஓய்கிறது.தேர்தல்பரப்புரை முடிவுக்கு வந்தபின் உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத நபர்கள் வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விதியைமீறி வெளியேறாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.