உள்ளாட்சித் தேர்தல் -நலத்திட்ட உதவிகள் வழங்க தடை

தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது.இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இதற்கு இடையில் தான் இன்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிவிப்பில்,தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவித்தார்.டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இன்று முதல் தேர்தல் நடந்தை விதிகள் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்க தடை  விதித்துள்ளது .மேலும் புதிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிடக்கூடாது என்றும்  எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவிப்பட்டுள்ளது.