உள்ளாட்சித் தேர்தல் ! தினகரன் 22ஆம் தேதி ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அமமுக நிர்வாகிகளுடன் திருச்சியில் நவம்பர் 22ஆம்

By venu | Published: Nov 16, 2019 05:53 PM

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அமமுக நிர்வாகிகளுடன் திருச்சியில் நவம்பர் 22ஆம் தேதி ஆலோசனை நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் சுமார் 3 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில்  நடைபெறாமல் உள்ளது.தற்போது வருகின்ற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதனால் கட்சிகள் அனைத்தும்  உள்ளாட்சித் தேர்தலுக்கான  பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் அமமுக சார்பாக அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அதாவது உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அமமுக நிர்வாகிகளுடன் திருச்சியில் நவம்பர் 22ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார் தினகரன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் கழக நிர்வாகிகள்,மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc