ஓட்ஸ் வைத்து எப்படி முகத்தை பொலிவு பெற செய்வது பற்றி பார்க்கலாம்

Let's talk about how to make oatmeal with oatmeal

வெளிநாடுகளில் ஓட்ஸ் இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் உணவுகளில் ஒன்று இதில் நார்ச்சத்து , வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டது .இது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் சருமத்திற்கு அழகு சேர்க்கும் பொருளாக பயன்படுகிறது. இதனை கொண்டு ஸ்கரப் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஓட்ஸ் வைத்து எப்படி சருமத்தை பொலிவு பெற செய்வது என்பதை பற்றி பார்க்கலாம். செய்முறை: ஓட்ஸ் பொடி செய்து இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து முகத்திற்கு தடவி ஸ்கரப் செய்து கழுவினால் முகம் நன்கு பளிச்சென்று காணப்படும். ஓட்ஸ் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து செய்வது என்பது சிறந்தது. அவற்றை வைத்து ஸ்கரப் செய்தால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் குறைந்து இளமையான தோற்றம் காணப்படும். முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து புளித்த தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஊற வைத்துக் கொள்ளவும் பின்னர் முகத்தைகழுவவும் இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஓட்ஸை  இந்த பொருளோடு சேர்த்து ஸ்கரப் செய்து வந்தால் சருமம் அழகாகவும் பொலிவுடனும் காணப்படும்.