உள்ளாட்சி பின்னடைவு குறித்த ஆலோசனையில் அதிமுக … இரட்டை குழல் துப்பாக்கி விரைவில் சுடுமா..

  • தற்போது நடந்து முடிந்த  உள்ளாட்சித் தேர்தலில் வெளியான  முடிவுகள் அதிமுக எதிர்பார்த்த அளவை பெறவில்லை என்ற கருத்து அந்த கட்சியில்  முன்வைக்கப்படுகிறது.
  • இது குறித்து அதிமுக தலைமை அதிரடி அலோசனை.

தேர்தலில் அடைந்த பின்னடைவு குறித்து அதிமுக அமைச்சர்கள் மாற்றும்  அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் ஒருங்கமைப்பாளர்களான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் இனைந்து ஆலோசனை நடத்தியதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அப்போதய முதல்வர் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக  கட்சி  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 90 சதவீத வெற்றியைப் பெற்றது. அதிலும் குறிப்பாக ஊராட்சி ஒன்றியங்களில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட இடங்களையும்,  மாநகராட்சிகளில் 100 சதவீதம் என்ற  வெற்றியைப் பெற்றது. ஆனால் இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஆளுங்கட்சி என்பதால் பெரிய அளவில் வெற்றியை ஈட்டும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 27 மாவட்டக் கவுன்சில்களில் 13 மாவட்டக்கவுன்சில்களை திமுகவிடம் பறிகொடுத்தது. ஊராட்சி ஒன்றிய இடங்களில் திமுக 60 சதவீதத்துக்கு மேல் கைப்பற்றியுள்ளது. எப்பொழுதும்  மேற்கு மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் வலுவாக  இருக்கும் அதிமுக, இந்த முறை தென்மாவட்டங்களில் பலவற்றை இழந்துள்ளது. இந்த பின்னடைவு குறித்து இரட்டை குழல் துப்பாக்கி எனப்படும் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை அதிமுக கட்சியின் தொண்டர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதாக அந்த கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

author avatar
Kaliraj