நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ…!!

கடந்த 2018-ஆம் ஆண்டு திரிபுராவில் நடந்து முடிந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றவுடன் தெற்கு திரிபுரா மாநிலத்தில் உள்ள பெலோனியா நகரில் மார்க்சிஸ்ட் கட்சியால் 2013-ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின் நிறுவப்பட்டிருந்த மாமேதை லெனின் சிலை உடைதெறியப்பட்டதுபாசிச சக்திகளுக்கு எதிரான சிம்மசொப்பனமாக புரட்சியாளர் லெனின் இன்றும் திகழ்வதால் அவர்கள் பதட்டம் கொள்கிறார்கள்!

tripura lenin statue க்கான பட முடிவு

யார் லெனின்?

முதலாளித்துவத்தை வீழ்த்தி பாட்டாளி வர்க்கத்தை அரியணையில் ஏற்றிய மகத்தான வரலாற்று நாயகன் அவர்மார்க்சியத்துக்கு உலக அரங்கில் முதன்முதலாக செயல் வடிவம் கொடுத்த புரட்சியாளர் லெனின்ஜார் என்ற கொடுங்கோல் மன்னன் ஆட்சியில் கட்டுண்டு தவித்த ரஷ்ய மக்களுக்கு மார்க்சியத்தின் ஒளிகொண்டு விடியல் தந்தவர் அவர்இனி பாட்டாளி வர்க்கத்துக்கு அடிமைவிலங்குகளை தவிர இழப்பதற்கு ஒன்றும் இல்லைஆனால் போராடி பெறுவதற்கு ஓர் பொன்னுலகம் உண்டு என்ற மார்க்சின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து பாட்டாளி வர்க்கத்துக்கு ஓர் பொன்னுலகை சோவியத்தாக உருவாக்கி காட்டியவர்.

 

 

காலம்காலமாக பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பை சுரண்டி கொழுத்து கிடந்த முதலாளிகளிடமிருந்து நிலங்களையும் உடைமைகளையும் மீட்டு பொதுவுடைமையாக்கி உலக முதலாளித்துவத்தின் சவப்பெட்டியில் முதல் ஆணியை அடித்தவர் அவர்ஆண்பெண் பாலின பேதத்தை உடைத்தெறிந்து சம உரிமை வழங்கினார்எல்லோருக்கும் கல்விதகுதிக்கேற்ற வேலை வாழ்வதற்கேற்ற ஊதியம்முறைப்படுத்தப்பட்ட வேலைநேரம் என ஒரு சமத்துவ உலகை சமைத்தெடுத்தார்!

பிரிட்டன்அமெரிக்காபிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகளிடம் சிக்கித் தவித்த இந்தியா போன்ற காலனி நாடுகளின் விடுதலை போராட்டத்தில் சோவியத் ஒன்றியம் துணை நிற்கும் என்றவர்தன்னை ஒரு உலக பிரஜையாக அறிவித்தார்அரசு என்பது ஒடுக்குமுறை கருவிஅதற்கு எந்த புனிதமும் இல்லைவர்க்கமாக மனிதகுலத்தை அணிதிரட்டி எத்தகைய அரசையும் தகர்தெறிய முடியும் என நிரூபித்து காட்டியவர்அதனால் தான் இன்றும் பாசிசவாதிகள் அவரது சிலையை கண்டும் அஞ்சுகிறார்கள்.

நெல்லையில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நிறுவப்பட்டது. மாமேதை லெனின் க்கான பட முடிவு

அப்படிப்பட்ட மகத்தான உழைக்கும் வர்க்கத்தின் தலைவனின் சிலையை தான் நேற்று நெல்லையில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நிறுவப்பட்டதுமாமேதை லெனின் அவர்களின் 12 அடி கம்பீரமான சிலையை மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் தோழர்.சீத்தாராம் யெச்சூரி திறந்து வைத்தார்மகாகவி பாரதியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் அஹாவென்று எழுந்தார் பார் எங்கள் மாவீரன் லெனின்!

கட்டுரையாளர் : ஆண்டோ கால்பர்ட் 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment