குழந்தைகளே விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள்- ஜிம்மி நீஷம்!

நேற்று முன்தினம் நடந்த  இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து அணிகள்

By murugan | Published: Jul 16, 2019 07:45 AM

நேற்று முன்தினம் நடந்த  இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது .முதலில் இறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை  பறிகொடுத்து  241 ரன்கள் எடுத்தது. பின்னர் 242 ரன்கள் இலக்குடன் களமிங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்தது இதனால் இப்போட்டி டையில் முடிந்தது.பிறகு  சூப்பர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் அடித்தது. பின்னர் 16 ரன்களுடன் இறங்கிய நியூஸிலாந்து அணி 15 ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவர்  போட்டியும்  டை ஆனது. இதனால் இறுதி போட்டியில் அதிக பவுண்டரி அடித்த அணிக்கு  வெற்றி என அறிவிக்கப்பட்டது. அதன் படி நியூஸிலாந்து அணி 17 பவுண்டரி அடித்து இருந்தது. இங்கிலாந்து அணி 23 பவுண்டரி அடித்து இருந்தது.நியூஸிலாந்து அணி யை விட ஆறு பவுண்டரி அதிகமாக  அடித்து இருந்ததால் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் இப்போட்டி முடிந்த பிறகு நியூஸிலாந்து அணியின் அல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் கருத்து ஒன்றயை ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.அந்த பதிவில் " குழந்தைகளே  இனி நீங்கள் விளையாட்டை தேர்வு செய்ய வேண்டாம் . பேக்கிங் அல்லது வேறு எதையாவது தேர்வு செய்யுங்கள் என கூறி இருந்தார். https://twitter.com/JimmyNeesh/status/1150562893777244160
Step2: Place in ads Display sections

unicc