குடியுரிமை திருத்த சட்டத்திற்காக இணைந்த ஆளுங்கட்சி- எதிர்க்கட்சி! டிசம்பர் 16இல் போராட்டம்!

  • புதிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதவை அமல்படுத்தப்போவதில்லை என சத்தீஸ்கர், கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் தெரிவித்து வருகின்றன.
  • கேரளாவில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் வரும் 16ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளது. 

இந்தியாவில் குடியேறி வாழ்ந்து வரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களில்  முஸ்லீம் அல்லாத மற்ற மதத்தினருக்கு விரைவில் குடியுரிமை வழங்கும் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசானது இரு அவைகளிலும் நிறைவேற்றியது. பின்னர் அச்சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டுவிட்டது.

இந்த சட்டத்தை அமல்படுத்தபோவதில்லை என கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அறிவித்திருந்தன. இந்நிலையில் கேரளாவில் ஆளுமைகட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து இச்சட்டத்திற்க்கு எதிராக போராட்டம் நடத்த உள்ள்ளதாக கேரளா முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்த போராட்டம் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.