கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கனிமொழி எம்.பி 1.50 கோடி நிதி வழங்கினார்.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரணம் கோரி மத்திய அரசும், மாநில அரசும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனை அடுத்து, பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக நாடாளுமன்ற மக்களவை கழக குழு  துணை தலைவருமான கனிமொழி , தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். பின்னர், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினார். அதன் பின்னர் மீண்டும் 50 லட்சம் நிதியுதவியை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார். இதனை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து

ள்ளார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.