மீண்டும் கலக்கலாக களமிறங்கிய ‘அயன்’ கூட்டணி! காப்பான் பட சூப்பர் ட்ரெய்லர்!

சூர்யா நடிப்பில் அடுத்ததாக காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். அயன்,  மாற்றான் திரைப்படங்களை அடுத்து மீண்டும் கே .வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், சூர்யா அவருக்கு பாதுகாவலராகவும் நடித்துள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் நேற்று இரவு 7 மணிக்கு வெளியானது. கே.வி.ஆனந்த் படத்தில் எதிர்பார்த்தது போலவே பாடல் காட்சிகளுக்கு அழகான லொகேஷன்கள், பரபரக்கும் ஆக்ஷன் காட்சிகள், ரசிக்கும் படியான வசனங்கள் இந்த ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளது. மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.