மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் கேள்விகள் இடம்பபெறுவது கண்டிக்கத்தக்கது -தினகரன்

கேந்திர வித்யாலயா பள்ளியின் 6 ஆம் வகுப்பு வினாத்தாளில் தலித் என்றால் என்ன?, முஸ்லீம் பழக்க வழக்கங்கள் என்ன? கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகிவருகின்றது.

இந்த நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பகுதிகளை உடனடியாக நீக்க வேண்டும் .

மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் இதுபோன்ற பாடத்தை இடம்பெற செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.