ஆர்பிட்டர் ஆராய்ச்சிக்களை சிறப்பாக செய்து வருகிறது! இஸ்ரோ டிவிட்டரில் தகவல்!

Orbiter is doing research better! ISRO information on Twitter!

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்களத்தை விண்ணில் செலுத்தியது. அதில் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் பகுதி நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. ஆர்பிட்டரில் இருந்து, தென்துருவ நிலவின் தரைப்பகுதியை ஆராய விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது. அப்போது நிலவின் தரையினை நெருங்குகையில் விக்ரம் லேண்டர், இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் லெண்டருடனான தொடர்பை மீட்க இஸ்ரோ விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். தற்போது இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில், ' திட்டமிட்டபடி நிலவின் மீதான ஆராய்ச்சியில் நிலவின் சுற்றுவட்டபாதையில் சுற்றிவரும் ஆர்பிட்டர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விக்ரம் லேண்டருடனான தொடர்பை பெற ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். என பதிவிடப்பட்டிருந்தது. விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் நாளை முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

Indian Space Research Center ISRO Chandrayaan launches 2 spacecraft to explore the Moon's south pole. The orbiter separates it from the moon's orbit. From the orbiter, Vikram Lander landed to explore the terrain of the south pole. Vikram Lander cut off contact with ISRO as the moon approached the ground. Since then, ISRO scientists have been struggling to regain contact with Lenter. On its Twitter page, ISRO said: 'The orbiter has continued to perform well on the Moon's orbit as planned. Researchers are desperately trying to get in touch with Vikram Lander. As reported. Vikram Lander's life expectancy ends tomorrow.