தண்ணீரில் கொரோனா வைரஸ் உள்ளாதா? பிரான்ஸ் நாட்டு நீர் ஆய்வகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

தண்ணீரில் கொரோனா வைரஸ் உள்ளதாக, பிரான்சின் நீர் ஆய்வகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கொரோனா வைரஸ் தண்ணீரிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 அங்குள்ள சீன் நதி மற்றும் எவர் கால்வாய் நீர், பூங்காக்கள், தோட்ட பணிகள் மற்றும் அங்குள்ள அலங்கார நீரூற்றுகளுக்கும் பயன்படுகிறது. இந்நிலையில், இந்த தண்ணீரில் 27 மாதிரிகளை பாரிஸின் நீர் ஆய்வகம் பரிசோதனை செய்தது. அதில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சீன் நதி மற்றும் எவர் கால்வாய் மூடப்பட்டது. பிரான்சியில் கொரோனா வைரஸால் சுமார் 1,55,000 பேர்  நிலையில், 20,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.