50 அம்மா உணவகங்களுக்கு தலா 1 லட்சம் வழங்கிய லாரன்ஸ்.!

50 அம்மா உணவகங்களுக்கு தலா 1 லட்சம் வழங்கிய லாரன்ஸ்.!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் , மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு சினிமாத்துறை சேர்ந்த பிரபலங்களும் , அரசியல் தலைவர்களும் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் நடிகரான ராகவா லாரன்ஸ் ரூபாய் 3 கோடி நிதியுதவியாக வழங்கியது அனைவரும் அறிந்ததே, அதனை தொடர்ந்து அவர் மீண்டும் உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் துப்பரவு பணியாளர் களுக்க்காக ரூ. 25 லட்சத்தை நிதியுதவியாக வழங்கவும், அதனை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் கதிரேசன் அவர்கள் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மேலும் சென்னையில் உள்ள செங்கல்பேட்டை விநியோகஸ்தர்களின் சங்கத்திலுள்ள உறுப்பினர்களுக்கு ரூ. 15 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியிருந்தார். அதனை தொடர்ந்து தென்னிந்தியா நடிகர் சங்கத்திற்கு மீண்டும் ரூ. 25 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியிருந்தார்.
மேலும் தற்போது நடிகர்  ராகவா லாரன்ஸ் அடுத்ததாக ரூ. 50 லட்சத்தை அம்மா உணவகத்திற்கு வழங்கியுள்ளார். ஊரிலுள்ள ஏழை எளிய மக்களும், சாலைகளில் வசிக்கும் மக்களும் பசியில்லாமல் வாழ தொடங்கப்பட்டது தான் அம்மா உணவகம். இந்த ஊரடங்கு காலத்தில் பசியில் வாடும் மக்களுக்கு உதவும் வகையில் சென்னையில் உள்ள கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் பகுதியில் செயல்படும் அம்மா உணவகங்களுக்கு ரூ. 50 லட்சத்தை  நிவாரண நிதியாக ராகவா லாரன்ஸ் வழங்கியுள்ளார். மேலும் இந்த பகுதிகளில்  தான் ஏராளமான சினிமாயுலகில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தொகையை ராகவா லாரன்ஸ் சார்பில் சென்னை ஐகோர்ட் வழக்கறிஞரான ராஜசேகர் அவர்கள் சென்னை மாநகராட்சி ஆணையரான பிரகாஷ் அவர்களிடம் வழங்கியுள்ளார். தற்போது ராகவா லாரன்ஸின் இந்த செயலுக்கு பலர் தங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube