நாளை நடைபெற உள்ள ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் 11 தமிழக வீரர்கள்.!

  • 13-வது ஐ.பி.எல்.தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ளது.
  • இந்த ஏலப்பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் அனைவரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றவர்கள். 

13-வது ஐ.பி.எல். அடுத்த ஆண்டு இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ளது. இறுதி பட்டியலில் 332 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 146 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.இவர்களில் 73 வீரர்கள் மட்டுமே ஏலம் மூலம் அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.85 கோடியை ஏலத்தில் செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே  அணியில் உள்ள வீரர்களுக்கான தொகையை கழித்து மீதமுள்ள தொகையைத் தான் ஏலத்தில் பயன்படுத்த முடியும்.

உதாரணமாக  சென்னை அணி  20 வீரர்கள் தக்க வைத்து கொண்டு தான் மூலம் ரூ.70.40 கோடி போக மீதம்  ரூ.14.60 கோடி மட்டுமே உள்ளது. அதை வைத்து கொண்டுதான் அணிக்கு தேவையாக மீதம் உள்ள வீரர்களை எடுக்க முடியும்.

இதில் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், கிறிஸ் லின், மேக்ஸ்வெல், தென்ஆப்பிரிக்கா  ஸ்டெயின், இலங்கை அணியின்  மேத்யூஸ் ஆகிய 7 வீரர்களின் தொடக்க விலை ரூ.2 கோடியாகும். இந்த ஏலப்பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.

இவர்கள் அனைவரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றவர்கள். இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஜி.பெரியசாமி  அதிக கவனத்தை ஈர்த்துள்ளார். பெரியசாமி இந்த ஆண்டு நடந்த டி.என்.பி.எல். தொடரில் 9 ஆட்டத்தில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவரது அடிப்படை விலை ரூ.20 லட்சம் ஆகும்.

மேலும் வருண் சக்ரவர்த்தி, சாய் கிஷோர், சித்தார்த், மணிகண்டன், அருண் கார்த்திக், ஹரி நிஷாந்த், பாபா அபராஜித், முகமது, எம்.அபினவ், ஷாருக் கான் ஆகிய இறுதிக்கட்ட ஏலப்பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan