IPL 2018:இன்றைய போட்டியில் களமிறங்குவார்களா பெரிய தல ,சின்ன தல?அணியின் உண்மை நிலையை உடைத்த ஹசி?

சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்  ஹசி , இன்றைய போட்டியில் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் சென்னை அணியின் தல தோனி மற்றும் சின்னதல ரெய்னா ஆகியோர்  விளையாடுவார்களா மாட்டார்களா என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

Image result for raina dhoni 2018 ipl injury

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் கடந்த இரண்டு தொடர்களில் விளையாடாமல் இந்த தொடரில் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே பல சோதனைகளை சந்தித்து வருகிறது.

தொடர் துவங்குவதற்கு முன்னதாகவே மிட்செல் சாட்னர் காயம் காரணமாகவே தொடரில் இருந்து விலகிய நிலையில் முதல் போட்டியிலேயே சென்னை அணியால் 7 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட கேதர் ஜாதவும் காயமடைந்து தொடரில் இருந்து விலகினார், இதே போல் பலரும் தொடர்ந்து காயமடைந்து வருகின்றனர், போதாக்குறைக்கு தமிழகத்தில் தொடர்ந்து நடத்தப்பட்ட காவிரி மேலாண்மை குறித்த ஆர்பாட்டத்தால் சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் அனைத்து புனேவிற்கு மாற்றப்பட்டது.

Image result for raina dhoni 2018 ipl injury

இப்படி பல பிரச்சனைகள் சென்னை அணியை சுற்றி நடந்து வருவதால் ஏற்கனவே கடுப்பில் உள்ள சென்னை ரசிகர்களுக்கு மேலும் பெரும் அதிர்ச்சியாக இரண்டாவது போட்டியின் போது சுரேஷ் ரெய்னாவும், மூன்றாவது போட்டியின் போது தோனியும் காயமடைந்தனர்.

இதன் காரணமாக ராஜஸ்தான் அணியுடனான இன்றைய போட்டியில் தோனி மற்றும் ரெய்னா களமிறங்குவார்களா இல்லையா என்ற கேள்வியும், பயமும் சென்னை ரசிகர்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில், தோனி மற்றும் ரெய்னா இன்றைய போட்டியில் விளையாட அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதாக சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசீ தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து மைக் ஹசீ கூறியதாவது, “நான் தோனியிடம் இது குறித்து பேசினேன். அவர் தற்பொழுது நலமாக உணர்வதாக அவரே கூறினார், இது தவிர இரண்டாம் நாள் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டதால் அவர் இன்றைய போட்டியில் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதே போல் சுரேஷ் ரெய்னாவும் இன்றைய போட்டியில் விளையாடுவதற்கு முழு உடற்தகுதியுடன் உள்ளார், இதன் காரணமாக அவர்கள் இருவரும் இன்றைய போட்டியில் விளையாடுவார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment