உஷார் நிலையில் இந்திய கடற்ப்படை பயங்கரவாதிகள் எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம்

ஜம்மு காஷ்மீர்  வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்னர் அங்கு பதட்டமான சூழ்நிலை இருந்து வருகிறது .இதனால் ராணுவம் அங்கு குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

காஷ்மீர் பிரிப்புக்கு பின்னர் பாக்கிஸ்தான் சில நகர்வுகளை நகர்த்தி வருகிறது .அதன் விளைவாக பாக்கிஸ்தான் இந்தியாவுடான வர்த்தக உறவை நிறுத்தியது அதன் பின்பு டெல்லியில் இருந்து லாகூர் செல்லும்  சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் இரயிலை பாகிஸ்தான் நிறுத்தியது .

பாக்கிஸ்தான் ராணுவ தளபதி காஷ்மீர் மக்களுக்கு பாக்கிஸ்தான் ராணுவம் உதவ தயார் எந்த நிலைக்கும் செல்ல தயார் என்று எச்சரிக்கை விடுத்தார் .இதனைத்தொடர்ந்து இந்தியா  முழுவதும் பாதுகாப்பு  பலப்படுத்தபட்டுள்ளது .

இந்நிலையில் இந்திய கடற்படை உஷார் படுத்தப்பட்டுள்ளது எனவும் போர்க்கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பாக்கிஸ்தான்  பயங்கரகவாதிகள் எநேரமும்  தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் உஷார் நிலையில் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளது .

author avatar
Dinasuvadu desk