#INDvAUS : நடப்பு சாம்பியனை விரட்டி அடித்த இந்திய அணி !36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்தியா -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா அணி மோதியது. இப்போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா ,ஷிகார் தவான் களமிறங்கினர்.அரைசதம் அடித்த சிறிது நேரத்தில் ரோஹித் சர்மா  57 ரன்னில் வெளியேறினார். பிறகு களமிறங்கிய விராட் கோலியும் , ஷிகார் தவான் அதிரடியாக விளையாடினர்.பின்னர் 117 ரன்கள் எடுத்து ஷிகார் தவான் அவுட் ஆனார்.
அடுத்ததாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தனது அதிரடி ஆட்டத்தால் 4 பவுண்டரி , 3 சிக்ஸர் எடுத்து 48 ரன்னிலும் , டோனி 27 ரன்னிலும் ,கோலி 82 ரன்னிலும் வெளியேறினார்.இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள்  குவித்தது.ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சில் மார்கஸ் ஸ்டோனெனிஸ் 2 விக்கெட்டையும் ,நாதன் கொல்டர்-நைல், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் ஆகியோர்  தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். 353 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க சற்று மந்தமாகவே இருந்தது. ஓரளவு தாக்குப்பிடித்த பிஞ்ச் 36 ரன்களில் வெளியேறினார்.நீண்ட நேரம் களத்தில்  இருந்த வார்னரும் 56 ரன்களில் வெளியேறினார். ஸ்மித் ,க்வாஜா ஆகியோர் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.பின்  ஸ்மித் 69 ரன்கள் ,க்வாஜா 42 ரன்களில் வெளியேறினார்கள்.மற்ற வீரர்கள் ஜொலிக்க தவறினார்கள்.

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும்  இழந்து 316 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.களத்தில் கேரி 55* ரன்களுடன் இருந்தார்.இதன் மூலம் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.இந்திய அணியின் பந்துவீச்சில் பூம்ரா,புவனேஷ்வர் தலா  3 விக்கெட்டுகள் ,சாகல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.