புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முழுமையாக எதிர்ப்போம்-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முழுமையாக எதிர்ப்போம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.இந்த ஆலோசனைக்கு பின்னர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக ஜூன் 12ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முழுமையாக எதிர்ப்போம்.
புதுச்சேரியில் 116 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க உள்ளதாக கடிதம் வந்துள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு புதுச்சேரி ஒத்துழைப்பு வழங்காது என பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.