இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் ! இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி!

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று  டி20 , மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது.

இதை தொடர்ந்து இந்திய அணி ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.கடந்த 08-ம் தேதியில் நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 13-வது ஓவரின் போது விளையாடிய போது மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்தானது.

இந்நிலையில் இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் இடையிலான  இரண்டாவது ஒருநாள் போட்டி  இன்று டிரினிடாட் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.

author avatar
murugan