இந்தியா - சவுதி அரேபியா  இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

India - Saudi Arabia sign 5 major agreements !!

  • சவுதி இளவரசர் முகமது பின் சல்மா இந்தியா வந்துள்ளார். 
  • இந்தியா - சவுதி அரேபியா  இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
  • இந்தியா, சவுதி இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது  என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
சவுதி இளவரசர் முகமது பின் சல்மா இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அதில் இந்தியா - சவுதி அரேபியா  இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. டெல்லியில் பிரதமர் நரேந்திர  மோடி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மா முன்னிலையில் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா குறித்த 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், இந்தியா, சவுதி இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினோம். பாகிஸ்தானை தனிமைப்படுத்த உலக நாடுகள் கை கொடுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.பயங்கரவாதம் எவ்வளவு ஆபத்தானது என்பதை புல்வாமா தாக்குதல் உலகிற்கு காட்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Saudi Prince Mohammed bin Salma has arrived in India. India and Saudi Arabia sign five major agreements Prime Minister Narendra Modi said that the consultation was on strengthening the relationship between India and Saudi. Saudi Prince Mohammed bin Salma has toured India with five major agreements signed between India and Saudi Arabia. Prime Minister Narendra Modi and Saudi Prince Mohammed bin Salma signed five key agreements on security and tourism in Delhi. Later, Prime Minister Narendra Modi said, "We have consulted on strengthening the relationship between India and Saudi Arabia. World countries should give hands to isolate Pakistan. World Nations should unite against extremism.