இந்தியாவில் பாதிப்பு 1251 ஆக உயர்வு.! பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு.!

உலக முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி

By balakaliyamoorthy | Published: Mar 31, 2020 10:50 AM

உலக முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். சீனாவில் தொடங்கி சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனாவால் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,820 ஆக அதிகரித்துள்ளது. பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,85,807 ஐ எட்டியுள்ளது. இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,65,659 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக இருந்த நிலையில், நேற்று இரவு வரை 1251 ஐ எட்டியது. உயிரிழப்பின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனா தாக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா 198, கேரளா 202 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸிலிருந்து 102 குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc