வீரர்கள் இந்த செயலில் ஈடுபட்டால், நான் போட்டியை பார்க்க மாட்டேன்! அமெரிக்க அதிபர் அதிரடி!

விளையாட்டு வீரர்கள் தேசிய கீதத்தை அவமதித்தால், அந்த போட்டியை நான் பார்க்க மாட்டேன்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒருபக்கம் அதிகரித்து வருகிற நிலையில், கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட், காவல்துறை அதிகாரியால் இரக்கமற்ற நிலையில், கழுத்து நெரித்து கொல்லப்பட்டதை எதிர்த்து, அங்கு போராட்டம் வெடித்துள்ளது.

இந்நிலையில், முழங்காலிட்டு அமர்வதே நிறவெறிக்கு எதிரான செய்கையாக மாறியுள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள் பயிற்சியின் போது முழங்காலிட்டு, நிறவெறிக்கு எதிரான தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். 

இந்நிலையில், அமெரிக்க கால்பந்து சங்கம், தேசிய கீதம் இசைக்கும் போது, வீரர்கள் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி உள்ளது. இதனையடுத்து, கொரோனா தாக்கத்திற்கு பின், விளையாட்டுப்போட்டிகள் தொடங்கும் போது வீரர்கள் முழங்கால்படியிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதுகுறித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில், ‘விளையாட்டு வீரர்கள் தேசிய கீதத்தை அவமதித்தால், அந்த போட்டியை நான் பார்க்க மாட்டேன் .’ என தெரிவித்துள்ளார். 

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.