அக்கறை இருந்தால் தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கலாம்-கே.எஸ்.அழகிரி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

இதனால் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் அமைச்சரவை தொடர்பாக டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் , கமல், சீமான் வெற்றி பெறுவதற்கான இலக்கை அடையவில்லை. பிரதமர் மோடிக்கு தமிழகம் மீது அக்கறை இருந்தால் தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment