எனக்கு ஒரு வயது தான் ஆகிறது - வேடிக்கையான காரணம் கூறும் நடிகர் ஆரி!

ஆடும் கூத்து எனும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ்

By Rebekal | Published: Feb 14, 2020 10:40 AM

ஆடும் கூத்து எனும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகர் தான் ஆரி. இவர் அதனை தொடர்ந்தும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல சிறந்த நடிகருக்கான விருதுகளும் பெற்றவர் இவர். இந்நிலையில் அண்மையில் ஆரி எனும் இவரது பெயரை ஆரி அர்ஜுனா என இவர் மாற்றிக் கொண்டார். இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்திலேயே வைத்து தனது 34வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது பேசிய அவர் ஆரி என்னும் என்னுடைய பெயரை ஆரி அர்ஜுனா என மாற்றிய பிறகு நான் கொண்டாடக்கூடிய முதல் பிறந்த நாள் இதுதான். எனவே எனக்கு தற்போது வயது ஒன்றுதான் என அவர் சிரித்துக்கொண்டே நகைச்சுவையாக கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc