மசாஜ் செண்டருக்கு சென்ற தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி மிரட்டிய கணவன் மனைவி.!

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் புதுவையில் உள்ள மசாஜ் செண்டருக்கு

By balakaliyamoorthy | Published: Dec 16, 2019 07:14 PM

  • சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் புதுவையில் உள்ள மசாஜ் செண்டருக்கு செல்வதை அவர் வழக்கமாக வைத்திருந்தார்.
  • இந்நிலையில் மசாஜ் செண்டரின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த 61 வயது மஞ்சுநாத் என்ற தொழிலதிபர் அடிக்கடி புதுவையில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனையடுத்து மசாஜ் சென்டரின் உரிமையாளர் ராஜேஷ் என்பவர் அவருக்கு நண்பரானார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொழிலதிபருக்கு போன் செய்த ராஜேஷ், புதுவையில் புதிய மசாஜ் சென்டர் கிளை ஒன்றைத் திறந்து உள்ளதாகவும் அதில் இளம் பெண்கள் மசாஜ் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் சபல ஆசையுடன் அந்த புதிய மசாஜ் சென்டருக்கு சென்ற தொழிலதிபருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இடம் மசாஜ் சென்டர் போலவே தெரியவில்லை. இதனையடுத்து உள்ளே தொழிலதிபரை அழைத்துச் சென்ற ராஜேஷ் மற்றும் அவரது மனைவி, அவரை மிரட்டி நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்தனர். பின்னர் அவரிடம் இருந்த பணம், நகை மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை எடுத்து கொண்டு அவருடைய செல்போனில் இருந்து ’கூகுள் பே’ மூலம் ரூபாய் ஐந்து லட்சத்தை தன்னுடைய வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்து கொண்டனர். பின்னர் இதனை வெளியே சொன்னால் நிர்வாண வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் கணவன், மனைவி இருவரும் மிரட்டியுள்ளனர். இதன் பின்னர் மஞ்சுநாத் போலீசிடம் புகார் அளிக்க, போலீஸ் ராஜேஷ், அவருடைய மனைவி மற்றும் அவருடைய நண்பர் மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc