அனல் பறக்கும் ஆக்ஷ்ன் காட்சிகள், பரபரக்கும் வசனங்களுடன் வெளியானது தர்பார் ட்ரெய்லர்!

  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். 
  • இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த விழா மும்பையில் நடைபெற்று வருகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். நயன்தாரா ஹீரோயினாகவும், நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதற்கான நிகழ்ச்சி இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.