அசத்தலான தேங்காய் சாதம் செய்வது எப்படி?

நாம் நமது அன்றாட வாழ்வில் சமையல்களில் பல வகையான உணவுகளை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • தேங்காய் – 1
  • அரிசி – 2 கப்
  • கடலை பருப்பு – 25 கிராம்
  • காய்ந்த மிளகாய் – 3
  • கடுகு – அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – சிறு கொத்து
  • முந்திரி – 25 கிராம்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.  வாணலியில் எண்ணெயை காய வைத்து தேங்காய் துருவலை சேர்த்து சிறிது பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.  வறுத்து வைக்க வேண்டும்.

பின் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு காய வைத்து, கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும். அதன்பின் கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். இப்பொது வறுத்த தேங்காய் துருவல், சேயொரு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொது சுவையான தேங்காய் சாதம் தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.