சுவையான கடலை பருப்பு போண்டா செய்வது எப்படி?

நாம் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். நாம் வெறும் தேநீரை மட்டும் அருந்தாமல், அதனுடன் ஏதாவது ஒரு உணவினை சேர்த்து உண்கிறோம்.

தற்போது இந்த பதிவில் சுவையான கடலை பருப்பு போண்டா செய்வது எப்படி என்று பாப்போம்.

தேவையானவை

  • கடலைப்பருப்பு – ஒரு கப்
  • வெங்காயம் – 1
  • பூண்டு பல் – 1
  • இஞ்சி விழுது – அரை ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 1
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவைக்கேற்ப
  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் கடலை பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் ஊறிய கடலைப்பருப்புடன் இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து மிக்சியில் போட்டு தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.

அதன் பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும். பின் அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு பருப்புக்கு கலவையை உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான கடலை பருப்பு போண்டா தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.