அசத்தலான மசாலா இடியாப்பம் செய்வது எப்படி?

நமது அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் உன்னிம் உணவுகளை அனைத்தும் ஆரோக்கியமானதாகவும், ருசியானதாகவும் இருக்க வேண்டும். தற்போது சுவையான மசாலா இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • வேகவைத்த இடியாப்பம் – 4
  • வெங்காயம் – 2
  • தக்காளி – 1
  • முட்டை – 2
  • பச்சை மிளகாய் – ஒன்று
  •  கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
  • தனி மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
  • முந்திரி – 6
  • தாளிக்க
  • கடுகு, உளுந்து – ஒரு தேக்கரண்டி
  • பட்டை, லவங்கம் – 2
  • எண்ணெய் – 4 தேக்கரண்டி

செய்முறை

முதலில் வேகா வைத்த இடியாப்பத்தை உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, முந்திரி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வதங்கியது முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும்.

பின் முட்டை அரைப்பதமாக வெந்ததும், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும், உப்பு, கரம் மஸாலத் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை சேர்த்து பிரட்டை வேண்டும். இடியாப்பத்துடன் மசாலா நன்றாக சேர்ந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான மசாலா இடியாப்பம் தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.