புளி தரும் முக பொலிவு - உண்மை தான் எப்படி தெரியுமா?

புளி தரும் முக பொலிவு - உண்மை தான் எப்படி தெரியுமா?

தென்னிந்தியாவின் பெரும்பாலான உணவுகளுக்கு அச்சாரமாய் இருப்பது புளி. புளிக்குழம்பு, ரசம், சாம்பார் ஆகிய பாரம்பரிய தென்னிந்திய உணவுகளில் இது இல்லையென்றால் சுவையுமில்லை மனமுமில்லை. ஆனால், இந்த புலி உணவில் மட்டுமல்லாமல், அழகிலும் முக்கிய பங்கை கொண்டுள்ளது. 

புளியிலுள்ள அழகு தரும் பொருள்கள் 

புளியில் கால்சியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை அதிக அளவு காணப்படுகிறது. முக பொலிவுக்கு வைட்டமின் பி முக்கிய பங்காற்றுகிறது. 

உபயோகிக்கும் முறை 

அதாவது சற்று புளியை நீரில் குறைத்துக்கொண்டு அதனுடன், தேவைக்கேற்ப எலுமிச்சை சாறு, சிறிதளவு தேன் ஆகிய மூன்றையும் சேர்த்து, நன்றாக கலந்துகொள்ளவும். அதன் பின்பு அவற்றை முகத்தில் அனைத்து பக்கங்களிலும் படுமாறு பூசவும்.

இதனால் முகத்தில் காணப்பட கூடிய வறட்சி மாறி, பொலிவான அழகிய சருமத்தை தருகிறது. மேலும் முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் அதை நீக்கி வெண்மை நிறமாக முகத்தை மாற்றுகிறது.