இத்தனை கோடி வசூலா? அமெரிக்காவில் தாறுமாறாக வசூல் செய்த தர்பார்!

  • ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம். 
  • அமெரிக்காவில் தர்பாரின் வசூல் விபரம். 

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 9-ம் தேதி வெளியான திரைப்படம் தர்பார். இப்படத்தில், ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாட்டிலும் வசூல் வேட்டையில் தூள் கிளப்பியுள்ளது. தற்போது வரை இப்படம் அமெரிக்காவில் 1.5 மில்லியன் டாலர் வரை வசூல் செய்துள்ளது. இவை இந்திய மதிப்பில் ரூ 10 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.