இன்று முதல் 19 -ஆம் தேதி வரை விடுமுறை -வெளியான அறிவிப்பு

பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்று

By venu | Published: Jan 13, 2020 10:40 AM

  • பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • இன்று (ஜனவரி 13) முதல் ஜனவரி 19-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இதற்காக விடுமுறை நாட்களில் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் ஆகும். இந்நிலையில் புதுச்சேரி பள்ளிகளுக்கு இன்று (ஜனவரி 13-ஆம் தேதி) பொங்கல் விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜனவரி 13-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 8-ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று முதல் வருகின்ற 19-ஆம் தேதி வரையில், 8 நாட்கள் பள்ளி மணவ மாணவியருக்கு பொங்கல் விடுமுறை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc