ஹலோ,வெதர் டிபார்ட்மென்டா ?சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வடிவேலு பாணியில் ட்வீட்

உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.நேற்று முதலாவது

By venu | Published: Jul 10, 2019 04:27 PM

உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.நேற்று முதலாவது அரை இறுதிப்போட்டி நடைபெற்றது.இதில் இந்தியா மற்றும் நியூ சிலாந்து அணிகள் மோதியது.ஆனால் 46.1 ஓவர்களில் நியூசிலாந்து அணி 211 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.இதனால் ஆட்டம் நேற்று நிறுத்தப்பட்டது.இன்று மீண்டும் ஆட்டம் நடைபெற்றது.அதில் நியூ சிலாந்து அணி 50 ஒவர்கள்  முடிவில் 239 ரன்கள் அடித்தது.

இதனையடுத்து 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது .ரோகித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் .தற்போது இந்திய அணி  3.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 5 ரன்கள் எடுத்து இந்திய அணி திணறி வருகிறது.       இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்  தனது  ட்விட்டர் பக்கத்தில்  Hello, Weather Dept? When will the skies open? அதாவது வானிலை மையமா?வானம் எப்பொழுது திறக்கும் என்று வடிவேலு காமெடியுடன் பதிவிட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc