இன்று 4-மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு தகவல்..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களில் அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகின்றது.

By balakaliyamoorthy | Published: Dec 04, 2019 10:09 AM

தமிழகத்தில் கடந்த சில நாட்களில் அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகின்றது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து கொட்டி தீர்த்தது. வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரும்பாலான மாவட்டங்களில் அதாவது 17 மாவட்டங்களில் கனமழைப்  பதிவாகி உள்ளது. 3 மாவட்டங்களில் மிக கனமழைப் பதிவாகி உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு இன்றைக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. குமரி கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைகாற்று வீசும் அங்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தென்மேற்கு பருவமழை இந்த காலகட்டத்தில் 36 செ.மீ பெய்திருக்க வேண்டும். ஆனால் 42 செ.மீ பெய்திருக்கிறது. இது 13 சதவீதம் அதிகம் என வானிலை ஆய்வு நிறுவுனர் அறிவித்துள்ளார்.    
Step2: Place in ads Display sections

unicc