ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு ! நாள் ஒன்றுக்கு 35,000 பேர் சாப்பிடும் அளவான தாவரங்கள் நாசம் !

ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் நாள் ஒன்றுக்கு 35,000 பேர் சாப்பிடும்

By vidhuson | Published: May 14, 2020 04:32 PM

ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் நாள் ஒன்றுக்கு 35,000 பேர் சாப்பிடும் அளவான தாவரங்கள் நாசமடைகிறது. 

பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானிற்கு கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துப் பயிர்களை நாசம் செய்து வருகிறது. கடந்த 10 நாளாக ராஜஸ்தான் விவசாயிகள் அந்த வெட்டுக்கிளகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். 

முதலில் எல்லையோர மாவட்டங்களான ஜெய்சல்மீர், பார்மர், ஜோத்பூர் மற்றும் ஜலோரில் உள்ள பயிர்களை நாசம் செய்த நிலையில் தற்போது மேலும் சில மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள்  படையெடுத்துள்ளது. சோளம், கம்பு மற்றும் கால்நடைத் தீவனப் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 

தற்போது ஒரு சதுர கி.மீ உள் 40 லட்சம் வெட்டுக்கிளிகள் வந்திறங்கினால் ஒருநாளில் 35 ஆயிரம் பேர் சாப்பிடும் அளவுக்கு தாவரங்களை தின்று தீர்க்கும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். விவசாயிகள் வெட்டுக்கிளிகளை விரட்டுவதற்கு  விரட்ட வெடி வெடிப்பது, தகரம் மற்றும் அலுமினியப் பொருட்களை தட்டி ஒலி எழுப்புவது, அரசு சார்பில் பூச்சி மருந்து தெளித்து வருகின்றனர். இதனால் ராஜஸ்தான் மத்திய அரசிடம்  84 கோடி ரூபாய் நிதி கேட்டிருக்கிறது. 

Step2: Place in ads Display sections

unicc